Monday, October 18, 2010

நோபலுக்கு தகுதியான இந்திய டாக்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?

புதுடில்லி : சோதனைக் குழாய் குழந்தை மருத்துவத்தை கண்டு பிடித்த, நோபல் பரிசுக்கு தகுதியான இந்திய டாக்டர் பல்வேறு அவமானங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ராபர்ட் எட்வர்ட்ஸ் , மகப்பேறு நிபுணர் பாட்ரிக் ஸ்டெப்டோ இருவரும் இணைந்து, 1978, ஜூலை 25ம் தேதி, சோதனைக் குழாய் மருத்துவம் (ஐ.வி.எப்.,) மூலம் லெஸ்லி பிரவுன் என்பவருக்கு குழந்தை பிறக்க வைத்தனர். அந்தக் குழந்தையின் பெயர் லூயிஸ் பிரவுன். லூயிஸ் பிரவுன் பிறந்து ஒரு வாரம் கழித்து இதே ஐ.வி.எப்., மூலம் 1978, அக்டோபர் 3ம் தேதி இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தது. இந்த சோதனையை நிகழ்த்தியவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் முகர்ஜி. முகர்ஜியின் சோதனைக்கும் எட்வர்ட்சின் சோதனைக்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. முகர்ஜி, ஹார்மோன் தூண்டுதல் மூலம் அதிகளவில் கருமுட்டைகளை உருவாக்கி, அதில் ஒன்றை வெளியே எடுத்து, விந்தணுவோடு சேர்த்து மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் (கிரியோ பிரிசர்வேஷன்) உறைய வைத்தார்.

Thursday, September 9, 2010

கட்டுரைஉணர்வும் உப்பும்

தொ.பரமசிவன்


'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் 'சுவை ' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு 'வெளிளுப்பு ' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெளிளுப்பு '.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் 'சம்பளம் ' என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் சூஹஙீஹசுட் என்ற சொல் சூஹஙீஞ் என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

தொ.பரமசிவம் என்ற மாமனிதன்

மூலம்

நட்சத்திரவாசி வலைப்பூவிலிருந்து


இந்தக் கட்டுரை இரண்டு வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து தொ.பரமசிவம் அவர்கள் எழுதியுள்ள “தெய்வம் என்பதோர் “ என்ற நூலை எடுத்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக புரட்டும் போதுதான் ..ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருப்பதாகப்படும்..ஆகவே அவசரப்பட வேண்டாம் என்று நானே முடிவெடுத்துக் கொள்வேன்..இப்படியே இரண்டு ஆண்டுகள் போய்விட்டன..தொ.ப தமிழகத்தில் அல்லாமல் மேற்கில் பிறந்திருப்பாரேயானால் கிளஸ் லெவிஸ்ட்ரஸ்,எமிலி டர்கைம்,மாஎசல் மாஸ் போன்றோருக்கு இணையாக நிச்சயம் பேசப்பட்டிருப்பார்.ஆனாலும் அவரின் தளம் அசாதரணமானது.

Monday, August 30, 2010

உதவி தேவை


முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.
அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

Monday, June 28, 2010

பூக்கள் 99

Friday, June 18, 2010

நேர்காணல்


“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன்

சந்திப்பு:அசுரன்ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் மருத்துவம் பெறச்சென்ற நோயாளிகளில் பலரும் தம் நோய் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கும் நோக்கில், “பத்து வருசத்துக்கு முன்னுக்கு ஈரக்கொலைக்கிட்ட அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்”, “நாலு வருசத்துக்கு முன்னுக்கு முதுகில அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்” என்னும் விதமாகச் சொல்லியுள்ளனர்.

Friday, April 30, 2010

கிரிக்கெட் ரசிகர் சார் ! ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?“365 நாட்ளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”
சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

Wednesday, February 24, 2010

ராஜபாளையம் வனப்பகுதியில் ராஜநாகம் அதிகரிப்புராஜபாளையம் பிப்24: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தேவதானம் சாஸ்தாகோயில், தேவியாறு பீட், நவுலூத்து, பிராவடியாறு, கோட்டமலை, புல்லுபட்டி, அம்மன்கோயில் பீட், ராஜாம்பாறை, அளிணியனார் கோயில், வாழைக்குளம் பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளன.