Wednesday, February 24, 2010

ராஜபாளையம் வனப்பகுதியில் ராஜநாகம் அதிகரிப்பு



ராஜபாளையம் பிப்24: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தேவதானம் சாஸ்தாகோயில், தேவியாறு பீட், நவுலூத்து, பிராவடியாறு, கோட்டமலை, புல்லுபட்டி, அம்மன்கோயில் பீட், ராஜாம்பாறை, அளிணியனார் கோயில், வாழைக்குளம் பகுதிகளில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளன.


இப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வனச்சரக அலுவலர் ராஜகோபால் தலைமையில் வனவர்குழு, மாணவர்குழு உட்பட 200 பேர், 9 குழுக்களாக பிரிந்து, வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். இதற்காக பைனாகுலர், பிளாஸ்டர்ஆப் பாரிஸ், ஜிபிஎஸ் கருவிகளை பயன்படுத்தினர். இதில் விலங்குகளின் சிறுநீரகம், எச்சம், சாணம், கால்தடங்கள் ஆகியவை கணக்கிடப்பட்டன. இதன்மூலம் இப்பகுதியில் 5 புலிகள், 10 சிறுத்தைகள் இருப்பதாக தெரியவந்தது. கடந்தாண்டு கணக்கெடுப்பின் போது ஒரு புலி, 2 சிறுத்தைகள் மட்டுமே இருந்துள்ளன.மேற்குதொடர்ச்சி மலையின் உயரமான பகுதியாக கோட்டமலை உள்ளது. இப்பகுதியில் அரியவகை ராஜநாகங்கள் வாழ்ந்து வந்தன. தற்போதைய கணக்கெடுப்பின்படி, இப்பகுதியில் ராஜநாகங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

நன்றி: தினகரன் 24.02.2009
image courtesy: photobucket


No comments:

Post a Comment