Wednesday, September 7, 2011

சாப்பிட வாங்க!



ஸ்ரீ நியூ டில்லி மெஸ்
(அசுத்த சைவம்)

இவ்விடம் சகலவிதமான சவுத் இண்டியன் சாப்பாடு, டிபன், இத்யாதி சித்ரான்னங்களும் காபி, டீ, வகையராக்களும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சூடாகவும், நல்ல ருசியாகவும் (?) சுத்தமாகவும் (??) சகாய விலையிலும் கிடைக்கும்.

(தஞ்சாவூர் சீவல் மற்றும் கற்பூர வெற்றிலை கிடைக்கும்)
(கண்டிப்பாக அக்கவுண்ட் கிடையாது)

இன்றைய ஸ்பெஷல்!

புளியோதரை
ரச சாதம்
 டில்லி அப்பளம்

பின்குறிப்பு:

சமையல் மாஸ்டர் அரிசியை உலையில் போட்டுவிட்டு சற்று கண் அசந்துவிட்டபடியால், சாதம் இலேசாக (?) மாநிறமாகிவிட்டது அதனை புளியோதரையில் கலந்து விட்டோமென்று வாடிக்கையாளர்கள் தவறாகக் கருத வேண்டாமென்று சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறோம். புளியோதரையில் அடிக்கும் கருகிய வாசனை இதனால்  அல்லவென்றும் தெரிவிக்கிறோம்.

(தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள படங்களை பார்வையிடும்படி பிரஸ்தாபிக்கிறோம்)

இப்படிக்கு- ஸ்ரீ நியூ டில்லி மெஸ் நிறுவனத்தார், நெ. 71/2, மேஸ்திரி சங்கரஞ்செட்டியார் வீதி, ஜனக்புரி, புது டில்லி-35 
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

(வேலை காலி இல்லை)


படங்கள் அனைத்தும் இண்டியன் காப்பிரைட் ஆக்டின் (கி.மு1932) கீழ் ரிஜிஸ்டர் செய்திருப்பதால் பிரஸ்காரர்கள் படங்களை முன் அனுமதியின்றி பதிபித்தலாகாதென்று இதன்மூலம் (கண்டிப்பாக) தெரிவிக்கப்படுகிறது.



5 comments:

  1. கருப்பும் ஒரு அழகு, காந்தலும் ஒரு ருசின்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு..

    ReplyDelete
  3. உங்கள் படைப்பு மிகவும் நல்லாயிருக்கு தொடராவும்

    ReplyDelete
  4. hah haa haa உங்களுக்கு நல்ல timing sence இருக்கு!!! இப்ப சமையல் கற்று கொண்டீர்களா??சாப்பிட வருகிறோம்...

    ReplyDelete