Wednesday, November 25, 2009

“சிங்காரச் சென்னை” நோக்கி

“சிங்காரச் சென்னை” நோக்கி.. : சபா நாவலன்

லங்கைத் தமிழர் இரத்தவாடை இன்னும் வீசிக்கொண்டிருக்க சென்னை விமான நிலையத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்திறங்கிய வேளை வெம்மையும் வேதனையும் ஒருங்குசேர்ந்து என்னை வரவேற்றது. immigration சோதனைகளுக்கான நீண்ட நெடும் வரிசையில் காத்திருக்க நீலைச் சேலையில் வயது முதிர்ந்த அந்தப் பெண் சுத்திகரிப்பு வேலைகளை சோர்வுடன் நகர்த்திக்கொண்டிருந்தார்.traffic-chennai

இந்தியாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டுவிட்டதாக உலகம் முழுவது மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை சுத்தப் பொய் என்று பிரச்சாரம் செய்ய அந்தப் பெண் தொழிலாளி ஒரு அடையாளமாகவே தெரிந்தார். வெற்றிலையால் சிவப்பேறிய சுங்கப்பரிசோதனை அதிகாரி எந்த விசாரனையுமின்றி வெளியனுப்ப, இந்திய மண்ணில் அதுவும் தமிழ்ப் பேசும் மக்கள் திரளுக்க்குள் நானும் சங்கமமாகிக்கொண்டு புகை கக்கும் முற்பணம் செலுத்தும் டக்சியில் உட்காந்து கொள்கிறேன்.

12 மணி வெம்மை டக்சியின் இரும்பை உருக்கிவிடுமோ என்று பயங்கொள்ள வைத்தது. லண்டன் நிலக்கீழ் வண்டித்தொடர்கள் எழுப்பும் இரைச்சல் மனிதனின் கேட்கும் ஆற்றலைப் பாதிக்கவல்லது என இங்கிலாந்தில் பிறந்த இந்திய விஞ்ஞானி எழுதிய போது பத்திரிகைகள் முதல் பக்கத்தில் அவற்றைப் பிரசுரித்திருந்தன. அது உண்மையானா இந்திய வாகன இரச்சல்கள் மனிதனைச் செவிடாக்கிவிடும் ஆற்றல் படைத்தவை என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
தமிழ் நாட்டிற்கு இது எனது முதல் பயணமல்ல. 80 களின் ஆரம்பத்தில் ரெலோ இயக்கத்தின் கொலைக் கரங்களுக்குப் பயந்து எனது ரீன் ஏஜ் இன் ஒரு வருடம் தமிழ நாட்டின் தெருக்களில் மறைந்து திரிவதிலேயே கழிந்திருக்கிறது. சில வருடங்களின் முன்னர் “சிங்காரச் சென்னை” வரவேற்க வரவேற்க இதே தெருக்களில் சுற்றியிருக்கிறேன். வேறுபாடு என்னவென்றால் உலகமயம் உருவாக்கிய சென்னையின் வீதிகளில் வேறுபாடுகளை மட்டும் தேடிக்கொண்டிருந்தேன் என்பது மட்டுமே.

முதலாளித்துவம் உருவாகி அது ஏகபோகமாக வளர்ந்துவிட்ட ஒரு தேசத்தின் அன்னிய வாசியாகிப் பல வருடங்களின் பின்னர் தேசங்களுக்கிடையேயான ஒப்பீட்டைத் தேடும் உணர்வு உருவாகியிருந்தது.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் செல்வங்களையும் வழங்களையும் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் உருவான வல்லரசின் தெருக்களில் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும் அழகை ரசித்த புலம்பெயர் ஆசியன் என்ற வகையில் இந்தியத் தெருக்கள், அருவருப்பை விஞ்சிய பய உணர்வையே அதிகப்படுத்தியிருந்தது.

எல்லாவற்றிலும் மேலாக ஒரு மூன்றாவது உலகம் அதுவும் நான் பிறந்து வளர்ந்த தேசத்தின் கொல்லைப் புறம் தனது தேசிய வழங்களை வளர்த்துக்கொள்ளும் என்று அங்காலய்ப்பில் ஏற்பட்ட ஏமாற்றம் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
உலகத்தின் அத்தனை அழுக்குகளும் சென்னையின் தெருவோரங்களில் தானா கொட்டப்படுகிறது என்று அங்கு முதல் வருகின்ற மனிதன் எண்ணுவதில் எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஒவ்வொரு கால் கிலோமீட்டருக்கும் அழகான குப்பைக்கூடைகளைப் வைத்திருக்கும் ஐரோப்பிய அரசுகளைப் chennairesபோல் இந்திய அரசிடம் பணம் இல்லை என்கிறார் சற்று தேளிவாகவே பேசும் டக்சி ஓட்டுனர். அப்போ இந்த வெளி நாட்டுக் கோப்பரேட் நிறுவனங்கள் எல்லாம் வரிகட்டுவதே கிடையாதா என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

இந்த அழுக்குகளை எல்லாம் மீறி முளை விட்டுக்கொண்டிருக்கும் கட்டடக் குவியல்களும் கொங்றீட் சுவர்களும் உலகமயத்தின் ஆசிய விரிவாக்கத்தை விளக்கிக்கொண்டிருந்தது.

டக்சி “சிங்காரச் சென்னையின்” மையப்பகுதியை அண்மித்துக் கொண்டிருந்தது. அண்ணாசாலையில் ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாத அழுக்கு நிறைந்த பஸ்வண்டியின் வாசலுக்கு வெளியிலும் மனித்தத் தலைகள் தென்பட்டன. அந்த நெருக்கத்திலும் தன்னை நுளைத்துக்கொள்ள முனைந்த இளைஞன் கால் தவறி விழுந்து சுதாகரித்துக்கொண்ட போது யாரும் கண்டுகொள்ளவில்லை. கலாச்சார உலகமயம் உருவாக்கிய மனிதப்பெறுமானம் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து கொள்ள இதைவிடச் சிறந்த உதாரணம் காணப்பட முடியாது.

சக மனிதனின் உணர்வுகளிற்குப் பெறுமனமிழந்து போனதன் மற்றொரு வடிவம் தான், அனைத்து மனிதர்களும் உலகத்தின் அத்தனை ஓரங்களிலிருந்தும் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க அரங்கேறிய வன்னிப் படுகொலைகள். அத்தனையும் நடந்து முடிந்த பின்னர் படுகொலையின் சூத்திரதார்ரிகளோடு எந்தக் கூச்சமுமின்றி கைகுலுக்கிக் கொள்ளும் அவமானம் இங்கிருந்துதான் ஆரம்பமாகியிருக்கிறது என எண்ணத் தோன்றியது.
80 களின் ஆரம்பத்தில் தென்னிந்தியா இப்படி இருந்ததில்லை. மாற்றங்கள் எல்லாம் மேல்தட்டு மனிதர்களுக்கு மட்டும் தான் நிகழ்ந்திருக்கிறது.
மஞ்சள் நிற முச்சக்கர வண்டிகளையும் அதனோடு போட்டிபோட்டுக்கொண்டு நச்சுப் புகை கக்கும் அத்தனை வாகனங்களையும் கடந்து தெருக்களில் சென்னை மத்தியதரவர்க்கம் பன்னிரண்டு மணி வெய்யில் கொடுமையிலும் எந்தச் சலனமுமின்றி எதையோ தொலைத்துவிட்ட அவசரத்துல் ஓடிக்கொண்டிருந்தது.

ஐரோப்பிய மத்தியதர வர்க்கம் வீதி ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும், சுற்றுச் சூழல் மாசடைவதற்கு எதிராகவும் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

பிராஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்த்திய வீரம் மிக்க போராட்டங்கள் தான் வேலை இழந்தோருக்கு வழங்கப்படும் “ஷோமாஸ்” என்கிற மாதந்தக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இவ்வாறான சமூக உதவித் திட்டங்களுக்காகவும், அபிவிருத்திக்களுக்காகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள, மேலைத்தேச அரசுகள் எல்லாம் வர்த்தக நிறுவனங்களிடம் வரி விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த வரிவிதிப்பைக் கூட விரும்ப்பாத நிறுவனங்கள் தான் இந்தியா போன்ற வரிவிதிப்பற்ற நாடுகளை நோக்கி நகர்ந்தன. அங்கெல்லாம் மேற்கின் நிறுவனங்களிற்கான வரி புறக்கணிக்கப்படத் தக்கது. அதுமட்டுமல்ல மலிந்த கூலியும் கிடைக்கிறது.

இதன் மறு விளைவாக சிறு உற்பத்திகள் அழிந்து போகின்றன. அவையெல்லாம் இராட்சத நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன. இதனால் சென்னைத் தெருக்களைப் போல இந்தியா எங்கும் நாளையை உணவிற்காக ஏங்கும் எழைகளின் தொகை அதிகரிக்கிறது. இந்த எழைகளுக்கு ஊழல் மிகுந்த இந்திய அரசுகள் எந்த மானியக் கொடுப்பனவும் வழங்குவதில்லை. மக்களை இதற்காகப் போராடத் தூண்டுகின்ற யாரும் இல்லாமையால் பெரும் வியாபார நிறுவங்களிடமிருந்து வரியைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவற்றிற்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து மக்களின் பணத்தை வழங்குகின்றனர்.

மறு புறத்தில் இந்தியாவில் உருவகும் எதிர்ப்பு சக்திகள் தமக்குக் குறித்த எல்லைகளை வகுத்துக்கொண்டு அதற்கு வெளியே வருவதில்லை. மாவோயிஸ்டுக்களுக்கு பழங்குடி மக்களும் கூலி விவசாயிகளும் மட்டும்தான் அரசியல் தளம். அப்படித்தான் சீனாவில் இருந்ததாம். தெருவோரத்தில் தவிக்கவிடப்பட்டுள்ல இந்த நகர்ப்புற மத்தியதர வர்க்கம் இவர்களின் ஆதரவு சக்திகளாகக் கூட கருதப்படுவதில்லை.

ரிலயன்ஸையும், டாட்டவையும் வெளியேறக் கோரிப் போராட்டம் நடத்தப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதில்லை. சில தடங்கல்களின் பின்னர் பல்தேசியக் கம்பனிகள் தமது இருப்புக்களைப் பலப்படுத்திக் கொள்கின்றனர். இவையெல்லாம் வெற்றுக் கோஷங்கள் ஆகிப்போகின்றன.

இவ்வாறான இராட்சதக் கொம்பனிகளால் பாதிக்கப்பட்ட மக்களையும் சிறு வியாபாரிகளையும் இணைத்துக்கொண்டு ஐரோப்பாவில் நிகழ்ந்த போராட்டங்கள் போன்ற இழப்பீடு கோரும் போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இவ்வாறான வெகுஜனப் போராட்டங்கள் நடத்தப்பட்டல் மட்டுமே அரசு வியாபார நிறுவனங்களை வரிவிதிக்கும் நிலைக்குத் தள்ளப்படும். மக்களும் போராட்ட சக்திகளை நோக்கி அணிதிரட்டப்படுதல் சாத்தியமாகும். அது தவிர பல்தேசியக் கொம்பனிகளின் ஆதிக்கம் தளர்ந்து உள்ளூர் மூலதனம் வளர்சியடையும்.

இவற்றையெல்லாம் முற்போக்கு இயக்கங்கள் கையாளத் தவறியதன் விளைவுதான் தன்னார்வ அரசு சாரா நிறுவனங்கள்(NGO) சூழல் மாசடைதல் குறித்தும், வீதி ஒழுங்கு குறித்தும் விழிம்பு நிலை மக்கள் குறித்தும் பேசுகின்றன. இறுதியில் இவர்கள் அரசோடு முரண்படாத, பன்நாட்டு நிறுவனங்களுக்குப் பாதிப்பற்ற தற்காலிக உதவிகளை முன் மொழிகின்றன.

இதன் விளைவாக மக்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவதைவிட சரணடைதலையும் சமரச்சம் செய்தலையுமே தீர்வாக ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் எதிராக மக்களை அணிதிரட்டவும் அவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை, போராட்டங்களூடாகவும் அவற்றின் வெற்றிகளூடாகவும் ஏற்படுத்தவும் யாரிடமும் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் இல்லை. இலங்கையில் புலிகளிடம் வேறும் கோஷங்களும் ஆயுதங்களும் மட்டுமே இருந்தன. இந்திய முற்போக்கு இயக்கங்களிடம் கோஷங்களைக் கடந்து யாதார்த்தத்தை நோக்கிய தந்திரோபாயம் அதிகம் காணப்படவில்லை.

மவுண்ட் ரோட்டில் குளிராக ஏதாவது அருந்தலாம் போலிருந்தது. டக்சி ரைவரிடம் கேட்டால், கோலாவைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் சிறுவர்கள் கூட கோலாவை நச்சுப்பொருளாகக் கணிக்கும் காலகட்டத்தில் “கந்தசாமி” விக்ரமும் ராதிகாவும் கொக்கோகோலாவிற்கு விளம்பரம் வேறு. ஆக, மவுன்ட் ரோட்டில் உள்ளூர் பழரசமும் பார்கிங்கும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்பென்சர் பிளாசா மட்டும்தான் என்றார் டக்சிக்காரர். இருவருமாக அங்கே போனால், தமிழ் நாட்டின் மேல் மத்தியதர வர்க்கத்தின் “காசி” அதுதான் என்று அறிந்து கொள்ள நேரமெடுக்கவில்லை.
பிரான்சிற்குப் போனால் பிரஞ்சு மட்டும்தான் பேசுவார்கள்; ஜேர்மனியில் டொச் மட்டும்தான்; இத்தாலியில் இத்தாலியன் மட்டும்தான்; ஆனால் ஸ்பென்சர் பிளாசாவில் ஆங்கிலமும், ஹிந்தியும், கொஞ்சத் தமிழும் கலந்த ஒரு புதிய மொழி spencerபேசுவார்கள். நான் ஐரோப்பாவிற்கு அகதிகள் கூட்டத்தோடு வந்தவன் என்ற குற்ற உணர்வு உறுத்துவதுண்டு. ஆனால் சொந்த நாட்டிலேயே கலாச்சார அகதிகளான இந்திய மேல் மத்தியதர வர்க்கத்தைக் கண்டதும் அதெல்லாம் ஒரு நொடியில் சிறகு முளைத்துப் பறந்துபோய்விட்டது.

என்றாவது ஒரு நாள் தாஜ் கொன்னிமாராவிலோ அன்ன பூரணாவிலோ, பார்க் ஹொட்டேலிலோ, ஹெச்.எப்.ஓ இலோ, சோழாவிலோ பணம் பற்றிய துயரின்றி வைனோ விஸ்கியோ அருந்த வேண்டும் என்பதுதான் இங்கு குளிர்பானம் அருந்தும் ஒவ்வொரு மனிதனதும கனவு. அதுவும் ஸ்பென்சர் பிளாசா முன் தெருவில் பிச்சை கேட்கும் பச்சைக் குழந்தைகளைத் தாண்டி குளிரூட்டப்பட்ட அன்னிய தேசத்து வாகனங்களில் அமர்ந்து சென்னைப் புகைமண்டலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
உலகமயத்தின் பின்பகுதி; அது தெளிவாகத் திட்டமிட்ட படியே புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது அது இன்னும் இதையும் கடந்து செல்லும். இவற்றியெல்லாம் எதிர் கொண்டு புதிய சமுதாயத்தை நோக்கிய நகர்வில் இந்திய முற்போக்கு சக்திகளின் திட்டமிடல் என்ன என்பது தான் இங்கு பிரதான வினா. முத்துக்குமார் போன்ற மனிதாபிமானம் மிக்க தியாகிகள் பிறந்த மண்ணில் நம்பிக்கைகள் இன்னும் செத்துப்போகவில்லை.

ஈழப்பிரச்சனை ஒன்றைத் தெளிவாக முன்வைத்துள்ளது; யார் நண்பன் யார் எதிரி என்பதைத் உலகெங்கும் திட்டவட்டமாக கோடுபோட்டுக் காட்டியுள்ளது. தமிழ் நாட்டின் ஊடகவியலாளர்கள் சமூக உணர்வு மிக்க போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். புதியவர்கள், எல்லாவற்றையும் கேள்வியெழுப்பும் ஒரு கறைபடியாத கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்ற துளி நம்பிக்கையில் குளிர்பானத்தின் இறுதிப் பகுதியை முடிக்கும் போது குளிர்பானக் கடைப் பையனின் குரல் “Anything else, sir”..

சென்னையில் முதல் நாள் : ஒரு பயணக் குறிப்பு (02.08.2009)

நன்றி : inioru.com

No comments:

Post a Comment