ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ல் நிறுவப்பட்ட ஓர் ஒப்பற்ற நூலகம். இந்த நூலகம் 19 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி வரையிலான காலப்பகுதியில் வெளியான 100,000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களும், பிற எழுத்து வடிவங்களும் கொண்ட ஓர் அரிய நூலகம். கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை நூற்களை தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கலகத்தார் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவ பெரிதும் துணைபுரிந்தனர். மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ.கே ராமானுஜம் அவர்கள் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது. வேறு எந்த இந்திய மொழிகளிலுமோ அல்லது உலகமொழிகளிலுமோ இச்சிறு காலப்பகுதிக்கான ஆக்கங்களை இத்தனை நேர்த்தியாக இத்தனை எண்ணிக்கை கொண்ட நூல்களும் எழுத்துக்களும் சேர்ந்த தொகுப்பு ஏதும் இல்லை என்று கூறப்படுகின்றது.
இந்நூலகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களை நகல் எடுத்தும், microfilming செய்தும் தரும் வசதி உள்ளது. மேலும் 10000 க்கும் மேற்பட்ட நூல்கள் microfilming செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
அவ்வப்போது கருத்துரைகள், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
Roja Muthaiah Research Library (RMRL) செல்ல
இந்நூலகம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
ரோஜா முத்தையா பற்றி கடாரத்தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி எழுதிய கட்டுரைகள்
இந்நூலகத்திற்கு செல்ல வரைபடம்

No comments:
Post a Comment