Monday, June 28, 2010

பூக்கள் 99

Friday, June 18, 2010

நேர்காணல்


“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன்

சந்திப்பு:அசுரன்



ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் மருத்துவம் பெறச்சென்ற நோயாளிகளில் பலரும் தம் நோய் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கும் நோக்கில், “பத்து வருசத்துக்கு முன்னுக்கு ஈரக்கொலைக்கிட்ட அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்”, “நாலு வருசத்துக்கு முன்னுக்கு முதுகில அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்” என்னும் விதமாகச் சொல்லியுள்ளனர்.